Thursday, 4 April 2013

காம்ப்ளக்சிட்டி டு சிம்ப்ளிசிட்டி!
நம் உடல் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் போன்ற தனிமங்களால் ஆனது. இதே போல் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே எதோ ஒரு அல்லது ஒரு சில தனிமங்களால் ஆனவைதான்.  மொத்தம் எத்தனை தனிமங்கள் உள்ளன என்று பார்த்தால் 118 தனிமங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை பற்றி பள்ளியில் நம்மில் பலர் 'தனிம வரிசை அட்டவணை' அல்லது 'பீரியாடிக் டேபிள் ஆப் எலமண்ட்ஸ்' என்ற தலைப்பில் படித்திருப்போம். 
தனிமம் என்றால் என்ன? தனிமங்களுக்கு இடையே என்ன வித்தியாசம்? வெரி சிம்பிள். தனிமங்கள் எல்லாமே அணுக்கள் தான்.  அணுவில் புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான் போன்ற துகள்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை ஒவ்வொரு தனிமத்திற்கும் மாறுபடும். எலக்ட்ரான்கள் அமையும் விதமும் மாறுபடும். அதனால் தனிமங்களின் பண்புகளும் மாறுபடும். அவ்வளவுதான். தங்கம் ஜொலிப்பதும், எண்ணை வழுக்குவதும், பெட்ரோல் எரிவதும், உப்பு கரைவதும், உணவு ஜீரணிப்பதும், இறந்த உடல் அழுகுவதும், நம் ஹார்மோன்கள் ஆட்டம் போடுவதும் என்று நாம் காணும் எல்லாமே இந்த தனிம பண்புகளின் காரணமாகத்தான்! 
நான் வியப்பது இதை பற்றிதான். இந்த சிக்கலான உலகை வெறும் 3 துகள்களின் எண்ணிக்கையும் அமைப்பையும் மட்டுமே வைத்து எளிதாக்கி காட்டி விடுகிறது  அறிவியல்!
சரி அடுத்து ஒரு கேள்வி. எங்கிருந்து வந்தன இந்த தனிமங்கள் எல்லாம்?

No comments:

Post a Comment