Wednesday, 27 March 2013


சென்னை : மாமல்லபுரத்தில், 10 கோடி ரூபாயில், நீர்மூழ்கி கப்பலுடன் கூடிய கடல்சார்அருங்காட்சியகத்தை, தமிழக அரசு அமைக்க உள்ளது. இதற்காக, சென்னை துறைமுகம் வந்துள்ள, "ஐ.என்.எஸ். வாக்லி' நீர்மூழ்கி கப்பல், பத்து நாட்களில், அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.சென்னை மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே, தமிழகசற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், 10 கோடி ரூபாயில், "கடல் சார் அருங்காட்சியகம்' அமைக்கப்பட உள்ளது. 30 ஏக்கர் பரப்பில் அமையும் அருங்காட்சியகத்தில், நீர்மூழ்கி கப்பல் ஒன்று நிறுத்தப்பட உள்ளது.தமிழக அரசு கோரிக்கை இதற்காக, கடற்படையில் இருந்து, ஓய்வு அளிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பலை தரும்படி, தமிழக அரசு, பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்தது. இதையேற்ற பாதுகாப்பு அமைச்சகம், கடற்படையில், 36 ஆண்டுகள் பணியாற்றி, 2010ம் ஆண்டில் ஓய்வு பெற்ற, "ஐ.என்.எஸ்.வாக்லி' நீர்மூழ்கி கப்பலை வழங்க முன் வந்தது.இதையடுத்து, விசாகப்பட்டினத்தில் இருந்து, நேற்று முன்தினம், "ஐ.என்.எஸ்.வாக்லி', சென்னை துறைமுகத்திற்கு வந்தது.இதுகுறித்து, கடற்படை அதிகாரிகள் கூறியதாவது:"ஐ.என்.எஸ்.வாக்லி', 1974 ஆக., 10ம் தேதி, கடற்படையில் சேர்ந்தது. 300 அடி நீளம், 25 அடி அகலம், 20 அடி உயரம் கொண்டது. இதன் எடை, 1,921 டன். தண்ணீர் மேற்பரப்பில், 30 கி.மீ., வேகத்திலும், தண்ணீருக்குள், 28 கி.மீ., வேகத்திலும் செல்லும். 36 ஆண்டுகள் பணியாற்றி, 2010 டிச., 9ம் தேதி, ஓய்வு பெற்றது.கடல் சார் அருங்காட்சியகத்துக்காக, இந்த கப்பல், தமிழக அரசுக்கு தரப்பட்டுள்ளது. இன்னும், 10 நாட்களில் முறைப்படி, தமிழக அரசிடம், ஒப்படைக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாமல்லபுரத்தில் அமைய உள்ள கடல்சார் அருகங்காட்சியகத்திற்கு விரைவில் இந்த கப்பல் கொண்டு செல்லப்படும். பார்வையிட வசதி கப்பலின் உள்ளே சென்று பொதுமக்கள் பார்க்கவும், செயல்பாடுகளை தெரிந்து கொள்ள வசதியாக, குளிர்சாதன வசதி, காற்றோட்ட வசதி, ஒளி, ஒலி வசதிகளும் செய்யப்படும்.அருங்காட்சியகத்தில், கடல்சார் தொழில்நுட்ப பூங்கா, மீன் காட்சியகம், கடல்சார் கண்காட்சி, உணவு விடுதிகளும் அமைய உள்ளன. இந்த பணிகள், இரண்டு ஆண்டுகளில் முடியும்.

No comments:

Post a Comment