தூத்துக்குடி:மாங்ரோ காடுகள் வளர்ப்பதன் மூலம் சுனாமி வராமல் முற்றிலும் தடுக்கலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னக்காயல், பழைய காயல் பகுதியில் நடப்பாண்டில் பயிர் செய்ய முடிவு செய்திருப்பதாக தூத்துக்குடியில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டன.தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மாங்ரோ காடுகள் வளர்த்து இயற்கை இடர்பாடுகளில் இருந்து மக்களை காக்கவும், மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வனத்துறை மற்றும் அதன் லைன் டிபார்ட்மென்ட் இணைந்த கருத்தரங்கு ஒயில்டுலைப் பாரஸ்ட் சார்பில் டி.எஸ்.எப் ஹாலில் நடந்தது.ராமநாதபுரம் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அதிகாரி சுந்தரகுமார் துவக்கி வைத்தார். உயிர்கோள காப்பக கிரைம் கண்ரோல் பீரோ பிரதீப் வரவேற்றார்.டாக்டர் ரவிக்குமார், உதவி இயக்குனர் பாலச்சந்திரன், நாகப்பட்டினம் வேதாத்தனம் பாலாஜி, சுகந்தி தேவதாசன் அறக்கட்டளை பேட்ரிசன், உதவி வனப்பாதுகாவலர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். மன்னார் வளைகுடா உயிரின காப்பக தூத்துக்குடி ரேஞ்சர் நாகராஜன் நன்றி கூறினார்.வனத்துறை மற்றும் அதன் லைன் துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு முதலில் பவர் பாயிண்ட் பிரசன்டேசன் மூலம் மாங்ரோ காடுகள் சம்பந்தமாக விளக்கம் அளிக்கப்பட்டன.
மாங்ரோ காடுகள் உள்ள பகுதியில் நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகள் ஏற்படாது.மாங்ரோ காடுகளை பொறுத்தமட்டில் எல்லா இடங்களிலும் வளர்க்க முடியாது. ஆற்றுநீர், கடல்நீர் இரண்டும் சேரும் இடங்களில் தான் மாங்ரோ காடுகள் வளரும். தூத்துக்குடி மாவட்டத்தில் பழையகாயல், புன்னக்காயல் பகுதியில் மாங்ரோ காடுகள் வளர்க்கப்படுகிறது. நடப்பாண்டின் பழைய காயல் பகுதியில் மொத்தம் 25 ஏக்கர் பரப்பில் மாங்ரோ காடுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு முதல் இம் மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மண் அரிப்பை தடுத்தல், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருத்தல் போன்ற பணிகளையும் மீன்வளத்தை அதிகரிக்கும் செயல்களிலும் மாங்ரோ காடுகளின் பங்கு அதிகமாக இருக்கிறது. 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பாதிப்பில் மாங்ரோ காடுகள் உள்ள பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் இதன் வளர்ப்பை அதிகரிக்க செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.மொத்தம் மாங்ரோ 8 வகையில் உள்ளன. இந்திய அளவில் 4 லட்சத்து 87 ஆயிரத்து 100 ஹெக்டேர் பரப்பில் மாங்ரோ காடுகள் உள்ளன. கிழக்கு கடற்கரை பகுதியில் 56.7 சதவீதமும், மேற்கு கடற்கரை பகுதியில் 23.5 சதவீதமும், தீவுப்பகுதியில் 19.8 சதவீதமும் மாங்ரோ காடுகள் உள்ளன. இன்னும் இதன் பரப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து துறையினரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அதிகாரிகள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment